Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூ கலிடோனியாவில் சுய ஆட்சிக்கான வாக்கெடுப்பு!

In ஐரோப்பா
Published: 07:59 GMT, Nov 4, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Suganthini
new 1

பிரான்ஸின் தென் பசுபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில், எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் சுய ஆட்சிக்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

பிரான்ஸ் அரசாங்கத்துடன் எட்டப்படும் உடன்பாட்டுக்கு அமைய இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சுமார் 4 மணித்தியாலங்களாக பரிஸில் அமைச்சர்களுடன் நியூ கலிடோனியத் தலைவர்கள்  கடந்த வியாழக்கிழமை  கலந்துரையாடியுள்ளனர்.  இந்நிலையில், எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பில் இருதரப்பினர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் பிரதமர் எடோரட் பிலிப்பே (Edouard Philippe), ‘நியூ கலிடோனியாவின் சுய ஆட்சிக்கான வாக்கெடுப்பு மிக முக்கியமானதாகக் காணப்படும் நிலையில், இது தொடர்பில் ஆராயும் வகையில், இம்மாத இறுதியில் நான் நியூ கலிடோனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளேன்’ என்றார்.

மேலும் ‘வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்கள், ஐ.நா. தேர்தல் கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் ஆகியவை தொடர்பில் இருதரப்பினர்களும் கலந்துரையாடியுள்ளனர். இருந்தபோதிலும், நியூ கலிடோனியாவுக்கான வாக்கெடுப்புத் தொடர்பில் சரியான முறையில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை’ எனவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு கிழக்கே அமைந்துள்ள நியூ கலிடோனியாவில் தற்போது சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் பேர் வாழ்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg