Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறது இலங்கை அரசு – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

In இலங்கை
Updated: 10:59 GMT, Nov 4, 2017 | Published: 10:59 GMT, Nov 4, 2017 |
0 Comments
1313
This post was written by : Risha

நிலைமாறு கால நீதி செயற்பாட்டின் மூலமோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் மூலமோ எவ்வித நீதியும் கிடைக்கப் போவதில்லை. இவை அனைத்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை அரசின் முயற்சி என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிபுணராக பணியாற்றிய யோலன்டா போஸ்டர், கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இன்று (சனிக்கிழமை) சந்தித்தார். இதன்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது மேலும் தமது இன்னல்களை பகிர்ந்துக்கொண்ட உறவுகள், இலங்கை அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்தது போன்று, தற்போது சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம்.

எங்களுடைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உள்ளுர் அரசியல் தரப்புக்கள், அவ்வப்போது இது குறித்து குரல் கொடுக்கின்ற போதிலும் இதுவரை எவ்வித தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை.

அதேபோன்று, பல சர்வதேச பிரதிநிதிகளும் எம்மை சந்தித்து கலந்துரையாடிய போதிலும், அவர்களாலும் எந்த தீர்வும் காண முடியவில்லை என்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 258ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_3944 IMG_4001

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg