Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னோர்களை நினைவுகூர்ந்து படகு திருவிழா

In இந்தியா
Updated: 11:59 GMT, Nov 4, 2017 | Published: 11:59 GMT, Nov 4, 2017 |
0 Comments
1202
This post was written by : Risha

முன்னோர்களை நினைவுகூரும் வகையிலான படகு வழிபாட்டு திருவிழா, இந்தியாவின் கிழக்கு புபனேஷ்வர் நகரிலுள்ள பிந்துசாகர் குளக்கரையில் இடம்பெற்றது.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற குறித்த விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டு படகில் விளக்கேற்றி முன்னோர்களை நினைவுகூர்ந்தனர்.

கார்த்திகை மாதத்தில்வரும் முழு நிலவு தினத்தில் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம் அதிகாலையில் குளக்கரையில் கூடிய பக்தர்கள் வாழைமட்டை, ரெஜிஃபோம் மற்றும் கடதாசியால் படகுகள் செய்து அதில் விளக்கேற்றி குளத்தில் மிதக்கவிட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இது ஒடிசா கலாசாரத்தில் பின்பற்றப்பட்டுவரும் ஒரு விழாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg