Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டென்னிஸ் தரவரிசை நடால் மீண்டும் முதலிடம்?

In டெனிஸ்
Published: 08:59 GMT, Nov 4, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Surenth
Rafael Nadal

2017ஆம் ஆண்டுக்கான ஆண்கள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஸ்பெயினின் ரபேல் நடால் தொடர்ந்தும் நான்காவது முறையாகவும் முதலிடத்தை பிடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

பெரிஸ் நகரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் 2ஆவது சுற்றில் தென்கொரியாவின் ஹையோன் சுங்கை 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். இதில் பெற்றுக் கொண்ட வெற்றியின் மூலம் நடால் தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

31 வயதான நடால் இதுவரை 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்த ஆண்டில் அவர் பிரெஞ்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போன்ற தொடர்களில் சம்பியன் பட்டங்களை வென்றிருந்தார்.

கடந்த 2008, 2010, 2013ஆம் ஆண்டுகளிலும் ரபேல் நடால் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல் தர வீரராக இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg