Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கில் கள்ளு உற்பத்திக்கு தடையா? – சிவப்பு கொடி காட்டுகின்றார் சுரேஸ்

In இலங்கை
Updated: 12:22 GMT, Nov 4, 2017 | Published: 12:13 GMT, Nov 4, 2017 |
0 Comments
1252
This post was written by : Arul Jesu

அரசாங்கம் வடக்கில் கள்ளு உற்பத்தியை தடைச்செய்ய முற்படுமாக இருந்தால் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு சமனானது என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வட மாகாணத்தில் கள்ளு உற்பத்தி செய்யப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் முற்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.  அவை பொய்யான தகவல் என்றும் சொல்லப்படுகின்றது. எவ்வாறிருப்பினும், தடைசெய்வதற்கு அரசாங்கம் முற்பட்டால்  அந்த தொழிலை மேற்கொள்ளும் பன்னிராயிரம் குடும்பங்களை நடுதெருவில் தள்ளிவிடும் என கூறினார்.

மேலும், வடக்கில் புகையிலை உற்பத்தியை தடை செய்யவும் அரசாங்கம் முற்படுவதாக கூறிய அவர், அவ்வாறாயின் புகையிலை பொருட்களின் இறக்குமதிகளை உடன் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கள்ளில் இருந்து பல ஆரோக்கியமான உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அரசாங்கம் மது பாவனையை இல்லாது ஒழிக்க இவ்வாறு மக்களின் பொருளாதாரத்தில் கை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.

எனவே இவ்வாறு தடைசெய்ய முற்பட முன்னர், அந்த தொழில்சார் மக்களுக்கு மாற்று தொழில் தெரிவை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg