Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆறுமுகத்திற்கும், திகாவுக்கும் இடையில் மீண்டும் முறுகல்?

In இலங்கை
Updated: 13:49 GMT, Nov 4, 2017 | Published: 13:49 GMT, Nov 4, 2017 |
0 Comments
1279
This post was written by : Arul Jesu

ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தவர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினமும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்கள் கொட்டகலை நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

ஆர்பாட்டகாரர்கள் சுமார் இரண்டு கிலோமீற்றர் பேரணியாக சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தை ஆதரிக்கும் சுமார் 100 ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் இ.தொ.காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் ஜி.நகுலேஷ்வரன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC09137 DSC09140 DSC09149

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg