Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியட்நாமில் சூறாவளி: உயிரிழந்தோர் 19ஆக அதிகரிப்பு

In
Published: 05:28 GMT, Nov 5, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Suganthini

வியட்நாமை தாம்ரே (Damrey) சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது

தாம்ரே சூறாவளியானது நேற்று (சனிக்கிழமை) மாலை தாக்கியுள்ளது. இதனை அடுத்து 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 12 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சூறாவளித் தாக்கம் காரணமாக இதுவரையில் 33 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், சூறாவளியால் 370க்கும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வியட்நாமில் நேற்றுமுன்தினம் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பொதுவிடங்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

vietnam 2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg