Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எச்சரிக்கையினை பொருட்படுத்தாத தீவிரவாதிகள்! – சுட்டுக் கொன்ற படையினர்

In இந்தியா
Published: 06:16 GMT, Nov 5, 2017 |
0 Comments
1656
icon_com
This post was written by : Puvanes
jammu001

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய படையினரின் எச்சரிக்கையினையும் மீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகளை இந்திய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

உரி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கோட்டினைக் கடந்து இன்று அதிகாலை இரு தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர்.

எனினும் ஆரம்பத்திலேயே அவர்களை அவதானித்து விட்ட இந்திய படையினர் அவர்களை தொடர்ந்தும் முன்னேறி வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய படையினரின் எச்சரிக்கையினைப் பொருட்படுத்தாது தீவிரவாதிகள் எல்லைக் கோட்டினைத் தாண்டி வந்ததால் அவர்கள் மீது இந்தியப் படை துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் மேலும் தீவிரவாதிகளின் நடமாட்டம் காணக்கூடும் என்ற சந்தேகம் காரணமாக இந்திய படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவது அதிகரித்துள்ளதோடு, அவர்களை கட்டுப் படுத்தும் செயற்பாடுகளில் இந்திய இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg