Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்க கோரிக்கை!

In இந்தியா
Updated: 06:52 GMT, Nov 5, 2017 | Published: 06:52 GMT, Nov 5, 2017 |
0 Comments
1604
This post was written by : Surenth

நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட நான்கு மத்திய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமரிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மகன் ஷவுர்யா தோவல் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் இந்த அறக்கட்டளையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்ஹா, எம்.ஜே.அக்பர் ஆகியோர் இயக்குநர்களாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் அறக்கட்டளைக்கு எவ்வாறு இயக்குநர்களாக இருக்கலாம்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த மத்திய அமைச்சர்கள் நான்கு பேரையும் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கபில் சிபல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg