Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகத் தலைவரின் பிறந்த தினம்: சீக்கிய மக்கள் கோலாகலம்!

In இந்தியா
Published: 06:58 GMT, Nov 5, 2017 |
0 Comments
1209
This post was written by : srikkanth

இந்திய வாழ் சீக்கிய மக்கள் நேற்று(சனிக்கிழமை) சீக்கியமத ஸ்தாபகர் குரு நானக் தேவ்வின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர். சீக்கிய கோயில்களில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் கலந்துகொண்ட மக்கள், பக்தியுடன் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

சீக்கியமத ஸ்தாபகர் குரு நானக்தேவ்வின் 548வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சீக்கிய மதத்தின் புனிதமான ஸ்தலமாக விளங்கும் தங்கக் கோவிலில் கூடிய ஆயிரக்கணக்கானவர்கள், புனித நீராடியதுடன், மெழுகுவர்த்தி மற்றும் எண்ணை விளக்குகளை ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மேலும் ஆலங்களில் குரு நானக் தேவின் போதனைகளின் படிப்பினைகள் மக்களுக்குப் போதிக்கப்பட்டது. விளக்குள் ஏற்றிஒளியேற்றி பக்தர்கள், குருவின் பிறந்த நாளை பரவசத்துடன் கொண்டாடிமகிழ்ந்துள்ளனர்.

குரு நானக் தேவ் 1469 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் தல்வண்டிப் பகுதியில் பிறந்தார். இந்து மற்றும் இஸ்லாம் மதங்களுக்க இடையில் நிலவிவந்த முரண்பாடுகளை தீர்ப்பதில் குரு நானக் மகத்தான பணியாற்றியிருந்தார்.

மக்கள் மத்தியில் அன்பு, ஒற்றுமையினைப் போதித்துவந்த குரு நானக், கடந்த 1539 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரின் உடல் உலகில் இருந்து அழிந்தாலும், அவரின் போதனைகள் ஆத்மபலத்துடன் இன்றும் சீக்கியமக்களினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg