Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கும் ராணுவம்! – பழிதீர்க்கும் நடவடிக்கையா?

In இலங்கை
Updated: 12:50 GMT, Nov 5, 2017 | Published: 07:05 GMT, Nov 5, 2017 |
0 Comments
1727
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
kepapilavu

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை ராணுவம், மக்களின் சொத்துக்களையும் ராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களையும் அழித்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேப்பாப்பிலவு மக்களின் காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு ராணுவம் இணங்கியுள்ள நிலையில், குறித்த காணியில் உள்ள சகல கட்டுமாணங்களையும் அழித்து வருகின்றது.

மக்களுக்கு வெறும் காணியை கையளிப்பதோடு, அதிலுள்ள சொத்துக்களை அனுபவித்து விடக் கூடாதென்ற நோக்கத்திலும், பழிதீர்க்கும் நடவடிக்கையாகவுமே இந்நடவடிக்கை இடம்பெற்று வருகின்றதென தகவலறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் ராணுவ தளபாடங்கள் நந்திக்கடல் பகுதி நோக்கியும், வெளியிடங்களுக்கும் நகர்த்தப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், மக்களுடைய காணிகளை முழுமையாக கையளிப்பதற்கான எந்தவித சமிக்ஞையும் தென்படவில்லையென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் காரணமாக, ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 432 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 111 ஏக்கர் காணியை கையளிப்பதாக ராணுவத்தினர் குறிப்பிட்டிருந்தனர். எனினும், ராணுவ முகாமை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க பணம் கோரியதைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 148 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே தற்போது காணிகளில் உள்ள கட்டுமாணங்களை அழித்து, தமது தளபாடங்களை ராணுவம் நகர்த்தி வருகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg