Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல் குற்றச்சாட்டு: சவுதியில் 11 இளவரசர்கள் கைது

In உலகம்
Updated: 08:05 GMT, Nov 5, 2017 | Published: 08:05 GMT, Nov 5, 2017 |
0 Comments
1265
This post was written by : Suganthini

ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில், இளவரசர் அல் வாலித் பின் தலால் (Al-Waleed bin Talal) உட்பட 11 இளவரசர்களை சவுதி அரேபியாவின் ஊழலுக்கு எதிரான குழுவினர் கைதுசெய்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஊழல் குற்றச்சாட்டில் 4 அமைச்சர்களையும் 12 முன்னாள் அமைச்சர்களையும் ஊழலுக்கு எதிரான குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்காக, சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான் ஊழலுக்கு எதிரான குழுவொன்றை நியமித்துள்ளார். இதனை அடுத்து, இவர்களது கைது இடம்பெற்றதாகவும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, 4 சிரேஷ்ட அமைச்சர்களும்  நேற்று (சனிக்கிழமை) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும், அவர்களுக்கும் கடும் தண்டனை இருக்கின்றது என, இளவரசர் முஹம்மட் பின் சல்மான் அறிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg