Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து அமைச்சர் ராஜினாமா

In
Published: 08:27 GMT, Nov 5, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Suganthini
resign

ஸ்கொட்லாந்து சிறுவர் விவகாரத்துறை அமைச்சர் மார்க் மெக்டொனால்ட் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் அவதூறுக் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், அவரது பொருத்தமற்ற நடத்தை காரணமாக பதவியை ராஜினாமாச் செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியைச் சேர்ந்த 37 வயதான இவர், நேற்று (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். இந்நிலையில், தனது ராஜினாமாக் கடிதத்தை ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்தூரிஜயனிடம் (Nicola Sturgeon)  அவர்  கையளித்துள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவிலுள்ள அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோக மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இவரது ராஜினாமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg