Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்கிறது அமைச்சு – வீதிகளில் வரிசையில் வாகனங்கள்!

In இலங்கை
Updated: 11:28 GMT, Nov 5, 2017 | Published: 11:28 GMT, Nov 5, 2017 |
0 Comments
1376
This post was written by : Varshini

எரிபொருள் தட்டுப்பாடு என்பது வெறும் வதந்தியே என பெற்றோலிய வளத்துறை அமைச்சு கூறி வந்தாலும், எரிபொருள் நிரப்புவதற்காக வீதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அவதானிக்க முடிகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியாகிய தகவலையடுத்து, எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளன.

எனினும், தேவையான அளவு எரிபொருள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பெற்றோலிய வளத்துறை அமைச்சு, தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் இந்நிலை காணப்படுவதோடு, குறிப்பாக தலைநகர் கொழும்பில் கார், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

பல பகுதிகளில் எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறான நிலையங்கள் தொடர்பாக தமக்கு தகவல் வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg