Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா யுவதிக்கு சேர்ந்த கதி – சிறை செல்லும் முன் பிறந்த ஞானம்!

In கனடா
Updated: 12:56 GMT, Nov 5, 2017 | Published: 12:56 GMT, Nov 5, 2017 |
0 Comments
1684
This post was written by : Puvanes

கனடாவில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் போதைபொருள் கடத்திய இளம் யுவதிக்கு 7 வருடங்களும் 6 மாதங்களும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் லிஸாபெல் என்ற யுவதி 35 கிலோ போதைப்பொருளினை பயணப்பெட்டியில் மறைத்து வைத்துக் கொண்டு சொகுசுக் கப்பல் ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவிற்கு கடத்தியுள்ளார்.

இதன்போது அவுஸ்ரேலிய எல்லைப்பகுதி அதிகாரிகள் நடத்திய தோதனை நடவடிக்கையின் போது குறித்த யுவதி உட்பட மேலும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது குறித்த யுவதி தொடர்ந்தும் இவ்வாறான போதைக்கடத்திலில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த யுவதிக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தனது தண்டனை தொடர்பில் லிஸாபெல் கருத்து தெரிவிக்கும் போது, இனி என் வாழ்நாளை சிறைக்குள் கழிக்கவேண்டிய நிலையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, இது எனக்கு மிகுந்த வலியைக் கொடுக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg