Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்க்குற்றங்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் பொய்யானவை!

In இலங்கை
Updated: 05:28 GMT, Nov 7, 2017 | Published: 04:58 GMT, Nov 7, 2017 |
0 Comments
1307
This post was written by : Anojkiyan

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ள புள்ளி விபரங்கள் சரியானவை அல்ல என, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோர்ட் நெஸ்பி குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்று வரை மூடி மறைக்கப்பட்டவையாகவும், மர்மமாகவும் இருந்துவரும் நிலையில் இவரது கருத்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தருஸ்மன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. அந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டாலும், சுமார் 7,000 பேரே இவ்வாறு கொல்லப்பட்டனர்” என கூறியுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது 40,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாமென மனித நேய அமைப்புக்கள் கூறி வரும் நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் இக்கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg