Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழரசுக் கட்சி கூட்டத்தில் அமளி: ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்!

In இலங்கை
Published: 05:04 GMT, Nov 6, 2017 |
0 Comments
1324
icon_com
This post was written by : Varshini

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக்கிளை நிர்வாகத் தெரிவு தொடர்பில் முல்லைத்தீவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பாரிய அமளி ஏற்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இக்கூட்டத்தில், உறுப்பினர் தெரிவின்போது இடம்பெற்ற முரண்பாடுகளால், கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

கட்சியின் முக்கியஸ்தர்கள் சென்ற பின்னர், ஆதரவராளர்களுக்கு இடையேயும் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா, வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

எவ்வாறாயினும், இது ஒரு ஆரோக்கியமான மோதல் என்று, கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg