Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழரசுக் கட்சி மீதான ஆர்வமே மோதலுக்கு காரணம்! – சுமந்திரன்

In இலங்கை
Published: 06:02 GMT, Nov 6, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Varshini

இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைய பலர் ஆர்வமாக உள்ளனர் என்றும், அதனாலேயே உறுப்பினர் தெரிவின் போது குழப்பமான நிலை தோன்றியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக்கிளை நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு, முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது கடும் அமளி ஏற்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமந்திரன் மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இவ்வாறான ஒரு செல்வாக்கு இல்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தின் போது, நிர்வாக ரீதியில் காணப்படும் குறைபாடுகளை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதனால் தற்காலிகமான நிர்வாக உறுப்பினர்கள் தெரிவே இடம்பெற்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிர்வாக குறைபாடுகள் சீர்செய்யப்பட்டதன் பின்னர், தற்போதைய தெரிவை நீடிப்பதா அல்லது மாற்றுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg