Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியா் பற்றாக்குறையால் 48 மணித்தியாலத்தில் 30 குழந்தைகள் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 07:56 GMT, Nov 6, 2017 | Published: 06:46 GMT, Nov 6, 2017 |
0 Comments
1352
This post was written by : Kemasiya

உத்தரப் பிரதேச அரச மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு வைத்தியா் பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாநிலத்தின் கோராக்பூர் மருத்துவமனையில் இடம்பெற்ற இச்சம்பவத்தை பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்துள்ளார்.

இக் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு வைத்தியர்களின் பற்றாக்குறை மற்றும் மூளையில் ஏற்பட்ட வீக்கம் என்பனவே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆறு குழந்தைகள் மூளை வீக்கம் காரணமாகவும் ஏனைய குழந்தைகள் வேறு வகையான பிரச்சினைகளுக்கும் உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 105 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது இந்தச் சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மருத்துவமனையில் எந்தவொரு வைத்தியரும் காணப்படாத நிலையில், உதவியாளர்கள் மட்டுமே இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg