Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுரங்குளி பகுதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 18:17 GMT, Nov 6, 2017 | Published: 06:41 GMT, Nov 6, 2017 |
0 Comments
1416
icon_com
This post was written by : Risha

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

மேலும் படுகாயமடைந்து சிகிச்சைபெற்றுவரும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.

யாழ். பயணிகள் பேருந்து விபத்து- ஐவர் உயிரிழப்பு – 44 பேர் காயம்!

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 44 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவா்களில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தொன்று குடை சாய்ந்ததிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த ஐவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 32 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்து, புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் மதகொன்றில் மோதி இவ்வாறு குடை சாய்ந்துள்ளது.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_5129 IMG_5172 IMG_5175

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg