Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனுஸ்தீவு குடியேற்றவாசிகளுக்கு அவசர மருத்துவ உதவி தேவை

In
Published: 06:44 GMT, Nov 6, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Suganthini
manus

மனுஸ்தீவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்பட்டபோதிலும், அம்முகாமிலிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் சிலர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனுஸ்தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாம், கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மூடப்பட்டது. இந்த முகாம் மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் 600 பேர், அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

அம்முகாமை விட்டு தாங்கள் வெளியேறினாலோ அல்லது பிறிதொரு தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டாலோ  தாக்குதலுக்கு உள்ளாகலாமெனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இம்முகாம் மூடப்பட்டதிலிருந்து சுத்தமான குடிநீர், உணவு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கியுள்ளதுடன், அம்முகாமில் மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு குறைந்தளவான உணவு மற்றும் குடிநீர் மாத்திரமே கிடைக்கினற்ன. இவர்களில் சிலர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகின்றது. இருப்பினும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லையென, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)