Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுநரின் கைகளில் சிக்கியுள்ள கிழக்கின் அபிவிருத்திகள் முடக்கம்: முன்னாள் முதலமைச்சர்

In இலங்கை
Updated: 11:34 GMT, Nov 6, 2017 | Published: 07:12 GMT, Nov 6, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Risha
Nazeer Ahamed

கிழக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் ஆளுநர் கைகளில் சிக்கியிருப்பதால், கிழக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டு வருவதாக  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏறாவூரிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”கிழக்கு மாகாணத்தில் திட்டமிடப்பட்ட வகையில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

2008ஆம் ஆண்டிற்கு முன்பாக, கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஆளுனரின் கைகளில் இருந்தபோது, அபிவிருத்திகள் முடக்கப்பட்டு, பாரபட்சமாக குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மாத்திரம் அபிவிருத்திகள் இடம்பெற்றது போன்ற வரலாற்று துரோகம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்று தற்போது எண்ணத் தோன்றுகிறது.

தேர்தலை நடாத்தாமல், ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த செயற்பாடு தொடர்பில் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு மத்திய அரசுக்கு உள்ளது.

கபடத்தனமாக கிழக்கு மாகாணசபை ஆட்சியை கவிழ்த்து, தமது சுயலாபத்திற்காக அரசாங்கம் தேர்தலை பிற்போடுகின்ற நிலையில் அதற்கு துணைபோகின்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு பதில்கூறியாகவேண்டும்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவினை எதிர்வரும் ஆண்டு 10 ஆயிரமாக அதிகரிக்கும் பணிகளை நாம் மேற்கொண்டிருந்தோம். ஆனால், அதனை தட்டிக்கழிக்கும் செயற்பாட்டில் ஆளுனர் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

அதேபோன்று வேலையற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)