Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டைக்குடியுரிமை: அவுஸ்ரேலியாவில் புதிய விதிமுறை

In
Published: 07:19 GMT, Nov 6, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Suganthini
ausi

அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது குடியுரிமை பற்றிய நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான புதிய விதிமுறையை அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) இன்று (திங்கட்கிழமை) முன்வைத்துள்ளார்.

இந்தப் புதிய விதிமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர், அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் மேல், கீழ் சபைகளில் வாக்களிப்புக்கு விடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய விதிமுறையின்படி, அரசியல்வாதிகள் தங்களது குடியுரிமை பற்றிய நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். தங்களது பிறப்பிடம், பிறந்த நேரம் மற்றும் தமது பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த நேரம் ஆகிய தகவல்களை அவர்கள் வழங்க வேண்டும்

இதேவேளை, அரசியல்வாதிகளில் எவராவது மற்றுமொரு நாட்டில் குடியுரிமை பெற்றிருந்தாலோ அல்லது அதைப் பெற்று பின்னர் நிராகரித்திருந்தாலோ எப்பேது, எவ்வாறு என்பது பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

இது பற்றிய விபரங்களை அறிவிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 21 நாள் கால அவகாசம் வழங்கப்படுகின்றது. இதேவேளை, புதிதாக இணையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும் அவ்வேளையிலேயே தங்களது குடியுரிமை பற்றிய சகல விபரங்களையும் தெளிவாக வழங்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பார்னாவை ஜோய்ஸ் உட்பட 6 அரசியல்வாதிகள், இரட்டைக்குடியுரிமை வைத்துக்கொண்டு சட்டரீதியற்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகிய நிலையில், அவர்களை பதவி நீக்கம் செய்வதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.

இதனையடுத்தே, அரசியல்வாதிகளின் குடியுரிமை பற்றிய  விவகாரத்தில் புதிய நடைமுறையை பிரதமர் கொண்டுவந்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் இரட்டைக் குடியுரிமையை வைத்துள்ளவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு அரசியலமைப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg