Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

18 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க வீரருக்கு கிடைத்த பெருமை!

In டெனிஸ்
Updated: 08:19 GMT, Nov 6, 2017 | Published: 08:19 GMT, Nov 6, 2017 |
0 Comments
1215
This post was written by : Puvanes

பிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சம்பியன் கிண்ணத் தொடரில் அமெரிக்க வீரர் ஜேக் சொக் சம்மியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜேக் சொக் செர்பிய வீரர் பிலிப் கிரஜினோவிக்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.

ஆரம்பத்தில் பிலிப்பின் கை ஓங்கியதோடு முதல் செட்டை அவர் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து பரபரப்பான ஆட்டத்தை காட்டிய ஜேக் சொக் இறுதியில் 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிலிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதேவேளை, 1999ஆம் ஆண்டுக்கு பிறகு பாரிஸ் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையினையும் ஜேக் சொக் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்த வெற்றியின் காரணமாக லண்டனில் நடைபெறவுள்ள உலகின் முன்னணி 8 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் உலக டூர் சம்பியன்ஷிப் தொடருக்கும் ஜேக் சொக் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg