Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூச்சாண்டி காட்டாமல் சர்வதேசத்திற்கு உண்மையை கூறுங்கள்: அரசாங்கத்திற்கு சவால்

In இலங்கை
Published: 08:43 GMT, Nov 6, 2017 |
0 Comments
1842
This post was written by : Varshini

இலங்கை தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கி வருகின்றோம் என பொய்கூறி பூச்சாண்டி காட்டாமல், உண்மையை அரசாங்கம் பகிரங்கமாக கூறவேண்டுமென புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் வி.சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

அரசாங்கத்திற்கு எதிராக அன்று ஆயுதம் ஏந்திய மக்கள் விடுதலை முன்னணியினருக்கு இன்று அரசியலில் ஈடுபட முடியுமென்றால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியுமென்றால், அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் போராளிகளை ஏன் விடுவிக்க முடியாதென்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழர்களுக்கு எல்லா உரிமைகளையும் வழங்குகிறோம் என்று உலக நாடுகளில் இலங்கை அரசாங்கம் கூறி வந்தாலும், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலேயே இங்கு சுயநலம் காணப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார். தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு சமவுரிமை வழங்க மாட்டோம் என இலங்கை அரசாங்கம் கருதினால், அதனை சர்வதேசத்திற்கு பகிரங்கமாக கூறுமாறும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg