Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெக்ஸாஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

In
Updated: 08:50 GMT, Nov 6, 2017 | Published: 08:49 GMT, Nov 6, 2017 |
0 Comments
1218
This post was written by : Suganthini

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் நகரில் இன்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடிய பொதுமக்கள், மெழுகுதிரிகளை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் டெக்ஸாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbot) உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலுள்ள பர்ஸ்ட் பாப்டிஸ்ட் எனும் தேவாலயத்தில் நேற்று ஞாயிறு ஆராதனையில் கூடியிருந்த மக்கள் மீது இனந்தெரியாத ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, 26 வயதான தாக்குதல்தாரியையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg