Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய கலாசார நடைமுறையை முன்வைக்க தெரேசா மே தீர்மானம்

In
Published: 09:13 GMT, Nov 6, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Suganthini
may

அண்மையில் பிரித்தானியாவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, புதிய கலாசார நடைமுறையை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே முன்வைக்கத் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சி உறுப்பினர்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடியபோதே, அவர் புதிய நடைமுறையை முன்வைப்பதற்குத் தீர்மானம் எடுத்துள்ளார்.

பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யப்படுமென்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg