Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரியாத் ஏவுகணைத் தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம்

In ஐரோப்பா
Updated: 10:31 GMT, Nov 6, 2017 | Published: 10:31 GMT, Nov 6, 2017 |
0 Comments
1294
This post was written by : Suganthini

சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள விமான நிலையத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லி ட்ரையன் (Jean-Yves Le Drian) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ரியாத் விமான நிலையத்தை இலக்குவைத்து ஹெளதி அமைப்பினரால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு எமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன், ஆபத்தான ஏவுகணைச் செயற்பாடு அதிகரித்துள்ளதென்பதை இந்த ஏவுகணைத் தாக்குதல் வெளிக்காட்டுகின்றது

இதேவேளை, கண்டம் விட்டுப் கண்டம் பாயும் ஏவுகணைகளின் செயற்பாடு மிகவும் ஆபத்தானவையாகும். ‘ என்றார்.

ரியாத்திலுள்ள விமான நிலையத்தை இலக்குவைத்து யேமனிலிருந்து நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதன்போது எவரும் காயமடையவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg