Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியட்நாமில் சூறாவளி: உயிரிழந்தோர் 50ஆக அதிகரிப்பு

In உலகம்
Published: 11:05 GMT, Nov 6, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Suganthini
wind

வியாட்நாமை தாக்கியுள்ள தாம்ரே சூறாவளியைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 29 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமில் கடும் மழை பெய்துவரும் நிலையில், தாம்ரே சூறாவளியானது நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) தாக்கியுள்ளது. இதனையடுத்து, பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.

மேலும், சூறாவளியால் சுமார் 2 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

wind 2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg