Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைமடு பகுதிக்கு விடுதலை – ராணுவம் வெளியேறியது!

In இலங்கை
Published: 11:26 GMT, Nov 6, 2017 |
0 Comments
1397
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் நிலைகொண்டிருந்த ராணுவம், அங்கிருந்து வெளியேறியுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான குறித்த பகுதியில், நீர்ப்பாசன திணைக்களத்தின் விடுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ராணுவத்தினர் அங்கு நிலைகொண்டிருந்தனர்.

அத்தோடு, இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதிக்கு சுற்றுலாவாக வருகைதரும் பிரயாணிகளுக்கு, சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்தனர்.

இதனால், அப்பகுதி மக்களின் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வந்ததோடு, ராணுவம் நிலைகொண்டிருந்த பகுதி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு மிகவும் அத்தியாவசியமாகவும் காணப்பட்டது. இதுகுறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஆலோசனைகளின் பிரகாரம்,  அவ்விடத்திலிருந்து ராணுவம் வெளியேறியுள்ளது.

இனிவரும் காலத்தில் இரணைமடு குளப் பகுதிக்கு மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி செல்ல முடியும் என்பதோடு, தமது வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஏதுவாக ராணுவத்தின் வெளியேற்றம் காணப்படுகிறது.

iranaimadu (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg