Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் ஏவுகணைகளை ஜப்பான் சுட்டு வீழ்த்தும்: ட்ரம்ப்

In
Published: 11:46 GMT, Nov 6, 2017 |
0 Comments
1405
icon_com
This post was written by : Suganthini
us5

வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால், ஜப்பானால் சுட்டு வீழ்த்தப்படுமென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜப்பானில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேலும்  தெரிவித்தபோது, ‘அமெரிக்காவிடமிருந்து பெருமளவான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், வடகொரியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினால், அவற்றை சுட்டு வீழ்த்த ஜப்பான் நடவடிக்கை எடுக்கும் ‘ என்றார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ‘ஏவுகணைத் தாக்குதலை வடகொரியா நடத்த முற்படும் பட்சத்தில், தேவைப்பட்டால் அவற்றைத் எம்மால் இடைமறிக்க முடியும்.

மேலும், வடகொரியாவின் கடுமையான நிலைப்பாட்டுக்கு எதிராக ஜப்பான் அதன் பாதுகாப்புத்திறனை அதிகரிக்க வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது’ என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)