Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவிற்கு தடை விதித்த ரஷ்யா!

In கனடா
Updated: 11:51 GMT, Nov 6, 2017 | Published: 11:51 GMT, Nov 6, 2017 |
0 Comments
1446
This post was written by : Puvanes

கனடாவின் குடிமக்கள் பலருக்கு ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ரஷ்யாவில் வழக்கறிஞர் செர்கி மேக்னிட்ஸ்கி என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு சிறைச்சாலையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து குறித்த சம்வத்துடன் தொடர்புடைய 30 ரஷ்ய அதிகாரிகளுகக்கு கனடாவிற்குள் நுழைய கனடா அரசு தடைவிதித்தது.

இதன் காரணமாகவே ரஷ்யா இந்த தடையை விதிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குறித்த விடயம் தொடர்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கருத்து தெரிவிக்கையில்,

கனடாவின் செயற்பாட்டுக்கு எதிராகவே இந்த தடையை விதிக்க தீர்மானித்துள்ளோம். எனினும் கனடா தடை விதிப்பு போன்ற செயற்பாடுகளை விட்டு விட்டு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg