Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் முதல் பெண் மேயராக பெருமைப் பெற்ற பெண்!

In கனடா
Published: 12:36 GMT, Nov 6, 2017 |
0 Comments
1465
icon_com
This post was written by : Puvanes
canada003

கனடா – மொன்றியல் நகரின் முதலாவது பெண் மேயர் என்ற பெருமையினை வலேரி பிளான்டே (valerie Plante) எனப்படும் பெண் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த பகுதியில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட மூன்று பேரை 51 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் பிளான்டே வெற்றி பெற்றுள்ளார்.

இதன் காரணமாக மொன்றியல் நகரத்தின் முதலாவது பெண் மேயர் என்ற அந்தஸ்த்தினையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், தனது வெற்றிக்கு பங்காற்றிய அனைத்து ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார். அதேபோன்று வலேரி பிளான்டேவிற்கு கனேடிய பிரதமர் ட்ரூடோவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னரே வலேரி பிளான்டே தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற கருத்துக்கணிப்பு வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg