Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெக்ஸாஸ் தாக்குதலுக்கும் அமெரிக்க துப்பாக்கி கலாசாரத்திற்கும் தொடர்பில்லை – டொனால்ட் ட்ரம்ப்

In
Published: 13:30 GMT, Nov 6, 2017 |
0 Comments
1090
icon_com
This post was written by : elayathambi

டெக்சாஸ் மாகாணத்தில் வில்சன் கவுன்டியில் சதர்லேண்ட் ஸ்ப்ரிங்க்ஸ் எனுமிடத்தில் உள்ள ஃப்ர்ஸ்ட் பேப்டிஸ்ட் தேவாலயத்தில்  நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், அமெரிக்காவின் துப்பாக்கி கலாசாரத்திற்கும் தொடர்பில்லை என அதிபர் டொனால்ட் ட்ரம் தெரிவித்துள்ளார்.இத்தகைய தாக்குதல்களை மன நலம் குன்றியவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய இத்தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில், எட்டுப் பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரின் மூன்று குழந்தைகளும் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். குறித்த ஃப்ர்ஸ்ட் பேப்டிஸ்ட் தேவாலய போதகரின் 14 வயதுடைய மகளும் இத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

தேவாலயத்தின் உள் நுழைந்த, டெவின் பட்றிக் ஹெலி என்ற 26 வயதுடைய துப்பாக்கிதாரி, முன்னாள் வான்படை உறுப்பினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வான்படையில்  பணியாற்றிய இவர்,  ஒழுங்கீனமான நடவடிக்கைகள் காரணமாக பதவி விலக்கப்பட்டிருந்தார். இவர் தனது மனைவியையும் குழந்தையையும் தாக்கிய குற்றச்சாட்டின் பெயரில் 2012 ஆம் ஆண்டு இராணுவத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளி என, அமெரிக்க வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg