Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெற்றோலை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி: மலையகம் ஸ்தம்பிதம்!

In இலங்கை
Updated: 14:08 GMT, Nov 6, 2017 | Published: 14:08 GMT, Nov 6, 2017 |
0 Comments
1207
This post was written by : Anojkiyan

நாடளாவிய ரீதியில் பெற்றோலை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், மலையகத்தின் முக்கிய நகரங்களான ஹட்டன், நுவரெலியா, நானுஓயா மற்றும் தலவாக்கலை ஆகிய நகரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில், பெற்றோல் மட்டுப்படுத்தி விநியோகிக்கப்பட்டாலும் அதனை பெற்றுக்கொள்வதில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்க வேண்டிய சிரமமான நிலை காணப்படுகின்றது.

இதனால், சில முக்கிய பிரதான வீதிகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) இந்நிலைமை வழமைக்கு திரும்பும் என பெற்றோலியத் துறை அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg