Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுயுகம் படைக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் கமல்ஹாசன்!

In இந்தியா
Updated: 05:54 GMT, Nov 7, 2017 | Published: 05:54 GMT, Nov 7, 2017 |
0 Comments
1467
This post was written by : Kemasiya

எனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்துக் கொள்கின்றேன். வேளை வரும் வரை காத்திருக்காமல் புதுயுகம் செய்வோம் என, நடிகர் கமல்காசன் டுவிட் பதிவு செய்துள்ளார்.

இன்று (செவ்வாய்கிழமை) தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை  தவிர்த்துள்ளதாகவும், அதை ஏற்று மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்று காத்திருக்காமல், உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தி, நேற்றைய தனது டுவிட்டு பதிவை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழகம் எங்கும் மழை தொடர்ந்தும் பெய்து வருவதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம் மக்களுக்கு உதவுவதற்கு காத்திருக்க தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில், “நாளை என்பது மற்றொரு நாளே, வேலை கிடக்குது ஆயிரம், இங்கு கோலையங்குடியையும் உயரச் செய்வோம், வேளை வரும் என காத்திருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம்.” என அவரின் டுவிட் பதிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg