Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவுக்கு ட்ரம்ப் பயணம்

In உலகம்
Updated: 11:37 GMT, Nov 7, 2017 | Published: 04:56 GMT, Nov 7, 2017 |
0 Comments
1386
This post was written by : Suganthini

முதற்தடவையாக ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட நிலையில், தென்கொரியாவுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்பட்டுச் செல்கின்றார்.

தென்கொரியாவுக்கான இவரது விஜயத்தின்போது, வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதத்திட்டம் தொடர்பில் அவர் கவனம் செலுத்துவாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் வார்த்தைப் பிரயோகங்கள், கொரிய தீபகற்பத்தில் மோதலுக்கான நிலைமையை ஏற்படுத்துமென்று பல நாடுகள் அஞ்சுகின்றன.

இருப்பினும், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதத்திட்டம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்தும் வகையில், தீர்க்கமான நடவடிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈடுபடுவாரென, வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg