Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊர்காவற்துறை பெண் படுகொலை: நீதிமன்றை தவறாக வழிநடத்த முயற்சி

In இலங்கை
Updated: 13:59 GMT, Nov 7, 2017 | Published: 05:49 GMT, Nov 7, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Risha
Kayts Court

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் நீதிமன்றை தவறாக வழிநடத்த முற்படுவதாக பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள சகோதர்களான இரு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

படுகொலை நடந்த சந்தர்ப்பத்தில் தாம் மருதனார் மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றதாக கூறி சந்தேகநபர்கள் தரப்பில், சி.சி.ரி.வி காணொளியொன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த காணொளி மருதனார் மடத்தில் எடுக்கப்பட்டது இல்லை எனவும், அவை ஊர்காவற்துறை பிரதேசத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்றும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர், சந்தேகநபர்கள் தவறான காணொளியை மன்றில் சமர்ப்பித்து, மன்றினை பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

சந்தேக நபர்கள் மன்றினை பிழையாக வழிநடத்த முயற்சித்தால் அதற்கான பலன்களை அனுபவிப்பார்கள் என நீதவான் தெரிவித்தார். அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை காலமும் ஊர்காவற்துறை பொலிசாரினால் மேற்கொள்ளபப்ட்ட அனைத்து புலன்விசாரணை அறிக்கைகளையும் மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் இரு சகோதர்கள் அன்றைய தினம் மாலை ஊர்காவற்துறை பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)