Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த ஆட்சியின் மோசடிகள் அம்பலம்?: காமினி செனரத் சரண்

In இலங்கை
Updated: 06:50 GMT, Nov 7, 2017 | Published: 06:50 GMT, Nov 7, 2017 |
0 Comments
1384
icon_com
This post was written by : Risha
Gamini-Senarath

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக தலைமை அதிகாரியான காமினி செனரத் நீதிமன்றில் சரணடைய தயாராக உள்ளதாக, அவரது சட்டத்தரணி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போது சட்டத்தரணி இதனை குறிப்பிட்டுள்ளார்.

காமினி செனரத், எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அவர் பூரண ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் சட்டத்தரணி உச்சநீதிமன்றிற்கு உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் காமினி செனரத் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg