Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு 20 பதக்கங்கள்

In விளையாட்டு
Published: 06:00 GMT, Nov 7, 2017 |
0 Comments
1211
This post was written by : Puvanes
shooting001

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் சம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சத்யேந்திர சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நேற்று நடைபெற்று குறித்த தொடரில்  3ஆம் நிலை போட்டியில் வென்ற இந்திய வீரர்களான சத்யேந்திர சிங், சஞ்சீவ் ராஜ்புத் மற்றும் ஷைன்சிங் ஆகியோர் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்திக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து  விறுவிறுப்பாக நகர்ந்த போட்டியில், சத்யேந்திர சிங் 454.2 புள்ளிகளைப் பெற்று சம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றார்.

இதில் 453.3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கத்தினை தன்வசமாக்கிக் கொண்டார்.

இந்தப் பதக்கங்களுடன் சேர்த்து இந்தியாவிற்கு 6 தங்கப்பதக்கங்களும், 7 வெள்ளிப் பதக்கங்களும் உள்ளடங்களாக மொத்தமாக 20 பதக்கங்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg