Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உ.பி.இல் தொடரும் அதிர்ச்சி: 58 குழந்தைகள் உயிரிழப்பு!

In இந்தியா
Published: 07:10 GMT, Nov 7, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Kemasiya

வட இந்தியாவின் உத்தரப்பிரதேச அரச மருத்துவமனையில், கடந்த நான்கு நாட்களில் 58 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக , குறித்த மருத்துவமனையின் வைத்தியர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரியின் வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை, அந்த  கல்லூரியின் விரிவுரையாளரும் வைத்தியருமான டி.கே.ஸ்ரீவத்சவா நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்துள்ளார்.

இதில் 32 குழந்தைகள் ஒரு மாதத்திற்கு உட்பட்டவர்கள் எனவும், ஏனைய 26 குழந்தைகளும் ஒரு மாதத்திற்கு மேற்பட்டவர்கள் எனவும் Dr.டி.கே.ஸ்ரீவத்சவா (Dr. D.K. Srivastava ) தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 105 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும், இவர்கள் மூளை வீக்கம் உட்பட மேலும் பல காரணிகளினால் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ் உயிரிழப்பிற்கு, குறித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் மருத்தும் பற்றாக்குறையே காரணம் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg