Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி – அமெரிக்கா விசா சேவை: மீண்டும் தொடர ஏற்பாடு

In உலகம்
Published: 07:38 GMT, Nov 7, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Suganthini

துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இடைநிறுத்தப்பட்டிருந்த விசா சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விசா விண்ணப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்படுமென்பதுடன், விண்ணப்பித்து மறுமொழிக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் ராஜதந்திர நெருக்கடியை சுலபமாக்கும் வகையில், முதற்கட்ட நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை தாமும் பின்பற்றவுள்ளதாக துருக்கிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக இரு நாடுகளுக்குமிடையிலான குடியேற்ற விசா அல்லாத அனைத்து விசா சேவைகளையும் இரு நாடுகளும் இடைநிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக, இந்த இரு நாடுகளுக்குமிடையில் குழப்பமான நிலைமையும் நிலவிவந்தது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)