Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியில் இருந்து தோனி அதிரடியாக நீக்கம்?

In கிாிக்கட்
Published: 08:53 GMT, Nov 7, 2017 |
0 Comments
9010
icon_com
This post was written by : Puvanes
dhoni003

இந்தியா எதிர் நியூசிலாந்து அணிகள் இன்றைய தினம் மோதிக் கொள்ளவுள்ள 3ஆவது ரி20 போட்டியில் தோனி விளையாடுவது சந்தேகம் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியின் போது தோனி சிறப்பாக விளையாடாத காரணத்தினாலே இந்தியா தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

முன்னாள் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களும் தோனி குறித்து கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் இருந்து தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஸ் கார்த்திக் விக்கெட் காப்பாளராக களம் இறக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த போட்டியின் போது தோனி 37 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை எடுத்திருந்தபோதும், கடைசியாக எதிர்கொண்ட 32 பந்துகளுக்கு 23 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

இதன் காரணமாக ரி20 போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட மாட்டார் எனவும், 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கே அவர் தகுந்தவர் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் இன்றைய போட்டியில் தோனி விளையாடுவது உறுதிசெய்யப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தோனி தற்போது இந்திய அணிக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதாலும், இக்கட்டான தருணங்களில் தோனியில் ஆலோசனை அவசியம் என்பதால் கோஹ்லி தோனியை அணியில் இருந்து நீக்கமாட்டார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மற்றொரு பக்கத்தில் மழை காரணமாக போட்டி நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg