Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனிய முன்னாள் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராக நடவடிக்கை

In
Published: 09:59 GMT, Nov 7, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Suganthini
carles

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) உள்ளிட்ட 5 பேர், எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

பொதுமக்களின் நிதியை தவறாகப் பயன்படுத்தியமை, கிளர்ச்சி மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் இந்த 5 பேர் மீதும் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்பெய்ன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி இவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது.

பெல்ஜியத்துக்குச் சென்ற இவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகமையால், இவர்களைக் கைதுசெய்வதற்கான ஐரோப்பிய பிடியாணையை ஸ்பெய்னிலுள்ள நீதிமன்றமொன்று பிறப்பித்தது.

இதனையடுத்து, இவர்கள் 5 பேரும் பெல்ஜியம் பொலிஸாரிடம் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சரணடைந்ததைத் தொடர்ந்து, இவர்களை நிபந்தனை அடிப்படையில் விடுவித்துள்ள பொலிஸார், எதிர்வரும் 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இம்மாதம் 17ஆம் திகதி பெல்ஜியத்திலுள்ள நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜராகவுள்ளதாக ஸ்பெய்னைச் சேர்ந்த வழக்கறிஞரொருவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg