Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம்: பொதுமக்கள் நம்பிக்கை இழப்பு

In
Published: 13:12 GMT, Nov 7, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Suganthini
may

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த ஒப்பந்தத்தை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே பேணுவாரென்ற பொதுமக்களின் நம்பிக்கை தற்போது குறைந்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

அக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பிரெக்சிற்றுக்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டுள்ளமைக்கு மத்தியில் பிரித்தானியப் பிரஜைகள் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது சிறந்ததென்று எண்ணி வாக்களித்ததைவிட, நிலைமை மோசமடையலாமென்று பொதுமக்கள் நம்புகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாக பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் ரோமுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். இருப்பினும், இந்த முயற்சி போதாதெனவும் பிரித்தானியப் பிரஜைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg