Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருள் பிரச்சினையால் திண்டாடும் இலங்கை! – விசேட குழு நியமனம்

In இலங்கை
Published: 13:19 GMT, Nov 7, 2017 |
0 Comments
1278
icon_com
This post was written by : Varshini

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைச்சர் மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகிய மூன்று அமைச்சர்களை கொண்ட இக் குழு, எரிபொருள் பிரச்சினை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

அத்தோடு, திடீரென ஏற்பட்டுள்ள இச்சிக்கல் நிலை குறித்து பெற்றோலிய வளத்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டுமென பிரதமர் ரணிலும் கோரியுள்ளார்.

இலங்கைக்கு கடந்த வாரம் வந்த இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் பெற்றோலிய வளத்துறை அமைச்சினால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக குறுந்தகவல் மூலம் செய்தி பரப்பட்டது. தரம் குறைந்த எரிபொருள் என்பதாலேயே குறித்த கப்பல் நிராகரிக்கப்பட்டதென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறியிருந்தார்.

இதனையடுத்து, எரிபொருளை பெற்றுக்கொள்ள கடந்த ஐந்து தினங்களாக மக்கள் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பதோடு, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 9ஆம் திகதிவரை பயன்படுத்துவதற்கு தேவையான அளவு எரிபொருள் கைவசம் உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg