Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது: ரிஷாட் பதியுதீன்

In இலங்கை
Updated: 17:21 GMT, Nov 7, 2017 | Published: 13:33 GMT, Nov 7, 2017 |
0 Comments
1251
icon_com
This post was written by : Vithushagan
Rishad-Bathiudeen

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 80 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமையினால்,  சந்தையில் எந்த விதத்திலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டரிசி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சதோச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் என்பனவற்றின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 136 கோடி ரூபா பெறுமதியான அரிசி சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 78 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg