Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரண வீட்டிற்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி! – 11 பேர் படுகாயம்

In இலங்கை
Updated: 04:16 GMT, Nov 8, 2017 | Published: 04:16 GMT, Nov 8, 2017 |
0 Comments
1719
This post was written by : Varshini

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், லொறியொன்று விபத்திற்குள்ளாகி 11 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் வெலிஓயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடொன்றிற்குச் சென்று, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11.30 மணியளவில் திரும்பிவந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

லொறியில் ஏற்பட்ட கோளாறே விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

lory accident (3) lory accident (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg