Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடி செய்த வரலாற்றுப் பிழையினால் ஏற்பட்டது பாரிய அழிவு!

In இந்தியா
Updated: 05:48 GMT, Nov 8, 2017 | Published: 05:05 GMT, Nov 8, 2017 |
0 Comments
1495
This post was written by : Puvanes

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது வரலாற்றில் நடந்த மிகப்பெரிய பிழை என முன்னாள் பிரதர் மன்மோகன் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் அஹமதாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எதிர்பார்த்த விடயம் நிறைவேறவில்லை. இந்தச் செயல் சட்டரீதியில் இடம்பெற்ற முறைகேடு மட்டுமல்ல திட்டமிடப்பட்ட கொள்ளை எனவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் இருந்து மோடியும், மத்திய அரசும் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்தினை இரு மடங்காக உயர்த்திக் காட்டுவதாக மோடி கூறியிருப்பது தேர்தலுக்காக வழங்கப்பட்ட போலியான வாக்குறுதிகள் மட்டுமே எனவும் மன்மோகன் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் நவம்பர் 8ஆம் திகதி பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய்த் தாள்களை அதிரடியாக தடை செய்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையினை நடைமுறைப்படுத்தினார்.

இந்த செயற்பாடு இந்திய பொருளாதாரத்தினை உலுக்கி விட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாரதத் தேர்தல் அண்மித்து வரும் நிலையில் குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg