Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் ஆயுதங்களைப் பயன்படுத்திவரும் தீவிரவாதிகள்!

In இந்தியா
Updated: 05:32 GMT, Nov 8, 2017 | Published: 05:32 GMT, Nov 8, 2017 |
0 Comments
1312
icon_com
This post was written by : Puvanes
gun001

ஜம்மு காஷ்மீர் – புல்வாமா பகுதியில் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அமெரிக்க தயாரிப்புகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் அண்மையில் இந்திய படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின மூலம், தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் கோல்ட் (M4 carbine colt) துப்பாக்கிகள் எனவும், இதில் பாகிஸ்தானுக்கு பாரிய பங்களிப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இந்திய இராணுவ மேஜர் பி.எஸ். ராஜூ கருத்து வெளியிடும் போது, சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவை அமெரிக்க தயாரிப்புகள், இவை பாகிஸ்தான் சிறப்பு படைக்கு வழங்கப்பட்டவையாகும்.

எனவே தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவமே ஆயுதங்களை வழங்கியுள்ளது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் தீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தெரிய வந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)